பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பட்டாசுத் தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகாசியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பட்டாசுத் தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகாசியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டை நீக்க உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது, நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். காற்று மாசு பட்டியலில் இருந்து பட்டாசுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் சிவகாசி செயலாளர் ஆர்.ஜீவா தலைமை வகித்தார். 
மாவட்டச் செயலாளர் க. சமுத்திரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கூடலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் சிவகாசி நரகச் செயலாளர் ஏ.இக்பால், திருத்தங்கல் நகரச் செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில் வட்டார துணைச் செயலாளர் கலைவாசகன், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் எம். முனியசாமி , வட்டாரக் குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com