டெங்கு கொசு புழு: திருத்தங்கல் மதுபானக் கூடத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் உள்ள மதுபானக் கூடம் டெங்கு கொசு புழு உருவாகும் வகையில் சுகாதாரக்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் உள்ள மதுபானக் கூடம் டெங்கு கொசு புழு உருவாகும் வகையில் சுகாதாரக் கேடாக காணப்பட்டதால், அக்கூடத்தின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
     திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் டெங்கு மற்றும் பன்றிக் காய்சல் தடுப்புப் பணி (பறக்கும் படை) அதிகாரி தே. முத்துகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், நகராட்சிப் பகுதிகளில் கொசு புழு உருவாகும் வகையில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளனவா, தண்ணீர் தேங்கியுள்ளதா, தண்ணீர் மூடாத நிலையில் உள்ளதா, கழிவு நீர் வாய்க்காலில் கொசு புழு உள்ளதா என ஆய்வு செய்தனர்.
   திருத்தங்கல்-செங்கமலநாட்சியார்புரம் சாலையில் உள்ள மதுபானக் கடை அருகே ராமர் என்பவர் உரிமம் பெற்று மதுபானக் கூடம்  நடத்தி வருகிறார். இங்கு நடத்தப்பட்ட ஆய்வின்போது, இங்கிருந்து அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் டம்ளர்களில் கொசு புழு உருவாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்ததாம். அதையடுத்து, மதுக்கூட உரிமையாளர் ராமருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.   திருத்தங்கல் நகராட்சி ஆணையர் சுவாமிநாதன் கூறியது:
நகராட்சி அலுவலகம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் தொற்று கிருமிகளை அழிக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்க்கக் கூடாது என விதிமுறை உள்ளது.
விதியை மீறி, நகராட்சிப் பகுதியில் வளர்க்கப்பட்ட 84 பன்றிகளை நகராட்சி சுகாதாரத் துறையினர் பிடித்துச் சென்றுள்ளனர். பன்றி வளர்க்கும் உரிமையாளர்களுக்கு போதிய அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com