விருதுநகர்

நிறுத்தப்பட்ட மருத்துவப் படியை மீண்டும் வழங்க வேண்டும்: பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மாநாட்டில் தீர்மானம்

DIN

நிறுத்தப்பட்ட மருத்துவப் படியை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மாநாட்டில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 
 விருதுநகரில் நடைபெற்ற அகில இந்திய பிஎஸ்என்எல் -டிஓடி ஓய்வூதியர் சங்க மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். 
இதில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், 2017 ஜன.,1 முதல் 15 சதவீத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவப் படியை மீண்டும் வழங்க வேண்டும். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4 ஜி சேவையை வழங்கி விட்டு, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் லுக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது. இதனால், பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, 4 ஜி சேவையை உடனடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும்.  பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதேபோல், தற்போது டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இதைத் தொடர்ந்து மாநில செயலாளர் நரசிம்மன், ஓய்வூதியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். மாவட்ட உதவிச் செயலாளர் புளுகாண்டி நன்றி கூறினார். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில்,  மாவட்டத் தலைவராக ராதாகிருஷ்ணன், செயலாளராக எம்.அய்யாச்சாமி, பொருளாளராக எம்.பெருமாள்சாமி ஆகியோர் உள்பட 18 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT