சிவகாசியில் பசுமை உரக்குடில் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சிவகாசியில் பசுமை உரக்குடில் அமைக்க பொதுமக்கள் திங்கள்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

சிவகாசியில் பசுமை உரக்குடில் அமைக்க பொதுமக்கள் திங்கள்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
சிவகாசி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் , மக்கும் குப்பைகளை உரமாக மாற்ற நகராட்சிப்பகுதியில் 6 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இந்த இடங்களில் நேருஜி நகரும் ஒன்றாகும். இப்பகுதியில் நகராட்சி துப்பரவுத்தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் உள்ள நகராட்சி இடத்தில் உரக்குழிகள் அமைக்க நகராட்சி முடிவு செய்து, அதற்கான ஆய்வினை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை நேருஜி நகர் பகுதிக்கு சென்றனர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உரக்குழி அமைத்தால், சுகாதாரக் கேடும் தூர்நாற்றமும் வீசும் எனக் கூறி பசுமை உரக்குடில் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் உரக்குடில்  அமைக்க ஆய்வு செய்ய இயலாமல் திரும்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com