சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 05:40 AM

அரசு கல்லூரி என அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாத்தூர் அருகேயுள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த சின்னகாமன்பட்டியில்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு, தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சாத்தூர் கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ் துறைத் தலைவரும், கிளைத் தலைவருமான ம. பெரியசாமி தலைமை உரையாற்றினார். இதில், உறுப்புக் கல்லூரியாக அறிவித்தது குறித்து உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கல்லூரியில் பணிபுரியும் அனைவருக்கும் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.     ஆர்ப்பாட்டத்தில், அரசு கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர், உதவிப் போராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக, வணிகவியல் துறைத் தலைவரும், கிளைச் செயலருமான பெரியசாமி வரவேற்றார்.

More from the section

அருப்புக்கோட்டையில் தேடப்பட்ட குற்றவாளிகள் இருவர் கைது
ராஜபாளையம் அருகே பனை விதைகள் நடும் விழா
கல்லூரி மாணவர் கல்குவாரி தண்ணீரில் விழுந்து தற்கொலை
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விருதுநகரில் சிதிலமடைந்துள்ள குடியிருப்பை அகற்றக் கோரிக்கை