வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

மண்டல அளவிலான மேசைப்பந்து போட்டி: அருப்புக்கோட்டை கல்லூரி அணி வெற்றி

DIN | Published: 12th September 2018 05:46 AM

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விருதுநகர் மண்டல அளவிலான மேசைப்பந்துப் போட்டியில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி அணி கோப்பையை வென்றுள்ளது.
      விருதுநகர் மண்டல அளவில் மேசைப்பந்து மற்றும் சதுரங்கப் போட்டிகள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வளாகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வந்தன. இப்போட்டிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்துகொண்டன. 
    இதில், மேசைப்பந்து இறுதிப் போட்டியில், சிவகாசிஅய்ய நாடார் கல்லூரி அணியும், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி அணியும் மோதின. அதில், தேவாங்கர் கலைக் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், கல்லூரி உடற்கல்வி ஆசிரியரையும், தேவாங்கர் கலைக் கல்லூரியின் செயலர் ராமசாமி மற்றும் முதல்வர் ஆர். பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

More from the section


காரியாபட்டி அருகே பெண்ணிடம்  2 பவுன் நகை பறிப்பு

பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
ராஜபாளையம் அருகே மணல் திருட்டு: 3 பேர் கைது
பொதுக் கழிப்பறையை இடிக்க எதிர்ப்பு: விருதுநகரில் நகராட்சி அலுவலகம் முற்றுகை


பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்