புதன்கிழமை 12 டிசம்பர் 2018

மனிதநேய ஜனநாயக கட்சி கொள்கை விளக்கக் கூட்டம்

DIN | Published: 12th September 2018 05:40 AM

ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலர் கண்மணி காதர் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஜாஹீர் உசேன் முன்னிலை வகித்தார். இணைப் பொதுச் செயலர் முகம்மது மைதீன் உலவி, மாநில துணைச் செயலர் முகம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.    இதில், ராஜபாளையம் நகராட்சியில் வீட்டுக்கு தீர்வை, குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை அதிகமாக வசூலிப்பதை ரத்து செய்யவேண்டும். காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்டப் பொருளாளர் பாதுஷா வரவேற்றார்.
 

More from the section

அருப்புக்கோட்டையில் பாலத்தின் கீழ் தெருவிளக்குகள் அமைக்கக் கோரிக்கை
பட்டாசு வழக்கு ஜன.22-க்கு ஒத்திவைப்பு: விருதுநகரில் பட்டாசு ஆலைகள் திறப்பதில் காலதாமதம்
அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
திருச்சுழியில் சீராக குடிநீர் விநியோகிக்க கோரிக்கை
நிர்மலா தேவி மீதான பாலியல் பேர வழக்கு: விசாரணை: டிச.19-க்கு ஒத்திவைப்பு