சனிக்கிழமை 17 நவம்பர் 2018

மாணவிகளுக்கு பாராட்டு விழா

DIN | Published: 12th September 2018 05:42 AM

ராஜபாளையம் தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     விழாவுக்கு, பள்ளிச் செயலர் ஷியாம் தலைமை வகித்தார். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, காமராசர் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்ற மாணவி அழகு காளீஸ்வரியையும் கலையருவி அறிவியல் கருத்தரங்கம் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பள்ளிச் செயலர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.
    இதில், பள்ளிக் குழுத் தலைவர் சந்திரசேகரராஜா, ஆலோசகர் வைத்தியநாதன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
 

More from the section

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: கல்லூரி மாணவர்கள் அவதி


அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்
அருப்புக்கோட்டை பாத்திரக் கடையில்  வருமானவரித்துறை சோதனை நிறைவு

ராஜபாளையம் அருகே 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி 
மகளிர் சுகாதார வளாகம்