அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பெண் ஊழியர்கள் இருவர் உள்ளிருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் நிரந்தர பணி வழங்கக் கோரி பெண் ஊழியர்கள் இருவர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவில் தாற்காலிக காசாளர்  பணியில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிபவர் தனலஷ்மி(40).இவரைப்போல தற்காலிக நூலகப் பணியாளராக கடந்த 8 ஆண்டுகளாகப்பணியில் உள்ளவர் மகாதேவி(39).இவர்கள் இருவரும் திங்கள்கிழமை அக்கல்லூரிக்கு வழக்கம் போலப் பணிக்கு வந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தின் வரவேற்பறை மண்டபத்தில் அமர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது தனலஷ்மி கூறியதாவது, கல்லூரியில் கடந்த மாதம் 3 அலுவலக  உதவியாளர் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகக் கூறி 3 பேர் பணியில் சேர்ந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதைக் கண்ட பின்னரே எங்களுக்கு அப்பணிகளுக்கு ஆள் சேர்க்கப்பட்டதே தெரிய வந்தது. அதேசமயம் காலிப்பணியிடங்கள் நிரப்பப் படும்போது பணிமூப்பு அடிப்படையில் எங்களுக்கும் பணி வழங்கப் பட்டிருக்க வேண்டும் . அவ்வாறு வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்தும், எங்களுக்கு நிரந்த அரசுப் பணி வழங்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தும்  நாங்கள் இருவரும் உள்ளிருப்புப்போராட்டம் நடத்துகிறோம் என்றார்.
இது தொடர்பாக கல்லூரிச் செயலாளர் ராமசாமிகூறியது:முறையாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து நேர்முகத்தேர்வுமூலம் காலிப்பணியிடங்களை நிர்வாகக் குழுவினர் நிரப்பியுள்ளனர் என்றார். பின்னர் செயலாளர் ராமசாமி உள்ளிருப்புப் போராட்டதில் ஈடுபட்ட இரு பெண்களிடத்திலும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் முழு உடன்பாடு எட்டாததால் தனலஷ்மி, மகாதேவி ஆகிய இருவரும் தங்களுக்கான பணி முறைப்படி கிடைக்கும்வரை போராடுவோம் என்றனர்.
இப்போராட்டத்தால் கல்லூரியில் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com