சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் விலக்கு அருகே சாலையில் ஏற்பட்டுள்ள

மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் விலக்கு அருகே சாலையில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை விரைந்து  சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் விலக்கு அருகே சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் அங்கு சுமார் ஒரு அடி உயரத்துக்கு மேடுகளும், பள்ளங்களும் உருவாகியுள்ளன.
இப்பகுதி சாலை வளைவில் இருப்பதால் மேடு பள்ளங்கள் இருப்பதை அறியாமல் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இது குறித்து இப்பகுதியிலுள்ள தேநீர்க் கடைக்காரர் கூறியது: நான்குவழிச் சாலையில் மேடு பள்ளங்கள் புதிதாக உருவாகியுள்ளன. இச்சாலையில் தூத்துக்குடியிலிருந்து சுமார் 60 டன்னுக்கும் அதிகமான சுமைகளை ஏற்றி வரும் கனரக வாகனங்களால் வெயிலில் இளகிய தார்ச்சாலைகளில் இது போன்ற பள்ளங்களை உருவாக்குகின்றன. பின்னர் தொடர்ந்து அவற்றில் வாகனங்கள் செல்லச் செல்ல பள்ளங்கள் பெரிதாகின்றன. 
இது வளைவான பகுதி என்பதால் இரவு நேரங்களில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இவற்றில் நிலைத் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையிலிருந்து திருச்செந்தூர் செல்வதற்காக இரவில் வந்த வேன் ஒன்று நிலை தடுமாறி சாலையோரப் பள்ளத்தில் உருண்டது. அதில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதுபோல இருசக்கர வாகனங்களில் வருவோரும் மேடு பள்ளங்களில் சிக்கி விபத்துக்கு ஆளாகின்றனர் என்றார். 
எனவே இப்பகுதியை விரைந்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com