ஏழாயிரம்பண்ணையில் அரசு நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் 92 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியை

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் 92 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாணவ, மாணவிகள், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட ஏழாயிரம்பண்ணையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களே பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் ஏழாயிரம்பண்ணை தேவர் நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்க வேண்டுமானால் இப்பகுதியில் அரசு பள்ளி இல்லாத காரணத்தால் தனியார் பள்ளிகளை நாட வேண்டியுள்ளது. அங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஒரு சிலர் மட்டும் மேல்படிப்பு படிக்கின்றனர்.
தற்போது ஏழாயிரம்பண்ணையில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளி 1926 இல் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை. உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான கட்டட வசதிகள் அனைத்தும் இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகத்துக்கும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி வரும் கல்வி ஆண்டுக்குள் இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளியை தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com