சிவகாசியில் கண்மாய்களை தூர்வாரக் கோரிக்கை

சிவகாசிப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க கண்மாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

சிவகாசிப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க கண்மாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மூத்தகுடிமக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஜெகதீஸ்சங்கர், முருகேசன், ஆல்பர்ட் செல்வராஜ் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் செவல்பட்டி வழியே வெம்பக்கோட்டை அணையை வந்தடைகிறது.  தற்போது இந்த அணைப்பகுதியில் தூர்வாரப்படாதலால் மணல் மேவியுள்ளது. சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாராமாக உள்ள, இந்த அணைக்கட்டினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் அகற்றப்பட்டன. அப்பகுதியில் இடிக்கப்பட்ட கட்டட கழிவுகள் அகற்றப்படாததால், சிறுகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிக்கிறது. சிவகாசி நகருக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக சிறுகுளம் கண்மாய் மற்றும் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.
சிவகாசி- விளாம்பட்டி சாலையில் உள்ள ஊருணியில்  கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். மணிக்கட்டி ஊருணியை தூர்வார வேண்டும். இப்பணிகளை மேற்கொண்டால், சிவகாசிப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com