விருதுநகர்

குடிநீர் நிறுவனத்தால் விவசாயம் பாதிப்பு: கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் புகார்

DIN


விருதுநகர் அருகே உள்ள பெரிய மருளூத்து கிராமத்தில் தனியார் குடிநீர் நிறுவனத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம், கிராம இளைஞர்கள் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பெரிய மருளூத்து கிராமத்தில் சுமர் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.
குடிநீரும் வாரம் ஒரு முறையே விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெரிய மருளூத்து கிராமத்தில் தனியார் குடிநீர் நிறுவனம் மிகப்பெரிய ஆழ்துளை கிணறு அமைத்துள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுத்து, விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மேலும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் குடிநீர் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

கவிஞர் தமிழ்ஒளி!

SCROLL FOR NEXT