விருதுநகர்

கோயில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டும்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழ்நாட்டில் இந்து மதத்தை எதிர்த்தால்தான் அரசியல் செய்ய முடியும், இந்து மதம் மக்களுக்கானது இல்லை என்ற மாயத் தோற்றத்தை திமுக ஏற்படுத்தி வருகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும். தெய்வ நம்பிக்கையுள்ளவர்களிடம் கோயில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
கோயில் நிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளது. நிலங்கள் மூலம் வருமானம் வருகிறது. ஆனால் பல கோயில்களில் விளக்கு கூட இல்லை. மக்களின் நம்பிக்கையை பாஜக மதிக்கும். மக்களின் நம்பிக்கையை நசுக்குபவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்று நினைக்கும் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT