பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும்: இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என சனிக்கிழமை இரவு ஆர்ஆர் நகரில்

பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என சனிக்கிழமை இரவு ஆர்ஆர் நகரில் நடைபெற்ற பெண்கள் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் ஆனிராஜா தெரிவித்தார். 
 விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகரில் இந்திய மாதர் சம்மேளனம் சார்பில் வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க இந்திய பெண்களின் பிரச்சார பயணம் எனும் தலைப்பில் சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாதர் சங்க நிர்வாகி பழனியம்மாள் தலைமை வகித்தார். 
இதில், இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் ஆனி ராஜா கலந்து கொண்டு பேசியது:  
வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் ஐந்து இடங்களிலிருந்து இந்த பிரச்சார குழு புறப்பட்டு சென்றுள்ளது. 
தற்போது, கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பிரச்சார குழுவானது ஆர்ஆர் நகரை வந்தடைந்துள்ளது. இந்த குழுவானது புது தில்லி வரை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்கிறது.
 இதில், பல்வேறு மொழி பேச கூடிய அனைத்து பெண்களும் பங்கெடுத்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கல்வி வேலைவாய்ப்பு வழங்கி வழங்கி பெண்களுக் கான வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது எங்களது பிரசாரத்தின் முக்கிய நோக்கம்.
 மேலும், பெண்கள் பாதுகாப்பிற்கு  மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம், மாநில குழு உறுப் பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com