சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மகம் திருவிழா

சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிமகம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிமகம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 6 மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அதையடுத்து, முதன்முறையாக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மகம் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதையடுத்து, கடந்த18 ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மாசி மகத்தை முன்னிட்டு, 10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில், சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தரகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com