தாதம்பட்டியில் சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்

அருப்புக்கோட்டை வட்டம் தாதம்பட்டி கிராமத்தில் பல மின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுவதால்

அருப்புக்கோட்டை வட்டம் தாதம்பட்டி கிராமத்தில் பல மின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுவதால் அவற்றை உடனடியாக அகற்றிப் புதிய மின்கம்பங்களை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராம வீதிகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பல்வேறு மின்கம்பங்கள் தற்போது அவற்றின் அடிப்பகுதி சேதமடைந்து துருப்பித்த நிலையில் உள்ளிருக்கும் கட்டுமானக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. குறிப்பாக இக்கிராமத்தின் பேருந்து நிறுத்தத்துக்கு பின்புறம் உள்ள வீதியில் ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி மட்டுமல்லாது உயரழுத்த மின்கம்பிகளை இணைக்கும் உச்சிப்பகுதிக்கு மிக அருகிலும் கம்பத்தின் கட்டுமானக் கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிவதால் மழைக்காலத்தில் மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோல மோசமான நிலையிலுள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க மின்வாரியத்துக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் கடந்த 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையெனப் புகார் எழுந்துள்ளது. 
எனவே சேதமடைந்து காணப்படும் அனைத்து மின்கம்பங்களையும் அகற்றி புதிய மின்கம்பங்கள் விரைந்து அமைக்க மீண்டும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com