விருதுநகரில் தனியார் வங்கிகள் கடன் தர மறுப்பதால் புதிய தொழில் முனைவோர் தவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்க

விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் புதிய தொழில் தொடங்க விண்ணப்பித்தவர்களுக்கு தனியார் வங்கிகள் கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் சிறு தொழில் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் அமைக்க எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள், ஆட்சியரிடம் அறிக்கை வழங்குகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குவது வழக்கம். 
இதையடுத்து, விருதுநகர் நகராட்சி பகுதியில் கட்டையாபுரம், பாத்திமா நகர், நீராவி தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் பலர் புதிய தொழில் தொடங்க நகராட்சிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த மனுக்களை நகராட்சி அதிகாரிகள், அந்தந்த பகுதி வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையிலும் ஏராளமான மனுதாரர்களுக்கு கடன் வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனியாக வங்கிகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அதில், சில தனியார் வங்கிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி விண்ணப்பதாரர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். 
இதனால் மானியத் தில் தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com