விருதுநகர்

இலக்கை நிர்ணயித்து பயணித்தால் வெற்றி உறுதி:தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

DIN


அரசு பொதுத்தேர்விற்கு மாணவ, மாணவிகள் இலக்கை நிர்ணயித்து பயணித்தால் வெற்றி அடையலாம் என தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசினார்.
சிவகாசி அருகே செவல்பட்டியில் தினமணி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கான சிகரத்தை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியது: சிகரத்தை வெல்வோம் என்ற இந்த நிகழ்ச்சி, உங்களுக்கு நாளைய உலகை எதிர்கொள்ள வழிகாட்டுவதாக அமையும். அரசு பொதுத் தேர்வுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், உங்களை தொலைக்காட்சி பார்க்காதே, செல்லிடப்பேசி பார்க்காதே, படி, படி என பெற்றோர்கள் கூறுவது, உங்களது எதிர்காலத்தை நினைத்து தான். 
பட்டணத்தில் மட்டும் கிடைத்த கல்லூரிப் படிப்பு, தற்போது கிராமப்புறங்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. மாணவர்களாகிய உங்களுக்கு வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கிறது. உங்கள் அனைவருக்கும் கல்லூரியில் இடம் கிடைக்க கூடிய வகையில் நீங்கள் மதிப்பெண்களை பெற வேண்டும். 
வாழ்க்கையில் உங்கள் இலக்கு என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு என்னவாக இருக்கப் போகிறீர்கள், யாராக இருக்கப் போகிறீர்கள். என்பதை தற்போதே முடிவெடுத்து அதை நோக்கி பயணிக்க தொடங்குங்கள். 
நீங்கள் உங்களுக்கு உண்மையானவராக இருக்க வேண்டும். நீங்கள் படிப்பது பெற்றோருக்காக அல்ல, ஆசிரியருக்காக அல்ல, உங்களுக்காக என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களும் உங்களை படி, படி என்று கூறும்போதெல்லாம் நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் தேர்வு என்பது வருங்காலத்தில் அடையப் போகும் நுழைவுவாயிலுக்கான வாயிற் படி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 
எனவே, மாணவர்கள் இந்த குறுகிய காலத்தை முறையாக பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT