ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்க அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். 

ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் மற்றும் ஆங்கில அகராதி பயன்பாடு  குறித்த பயிற்சி, கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வள மையத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
அப்போது, பயிற்சியை திடீரென பார்வையிட வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன், ஆசிரியர்களிடையே பேசியதாவது: 
எந்தவொரு செயலையும் கடமைக்குச் செய்யாமல், விருப்பத்துடன் செய்யவேண்டும். இதற்கு கற்பித்தலும் விலக்கல்ல. ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களுக்கு எப்படி பயிற்றுவிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும். 
புதிய பாடத் திட்டத்தின்படி, முதல் 3  வகுப்புகளுக்கு எளிமைபடுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறையிலும், 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு கற்பித்தல் கலை அடிப்படையிலும் கற்றல் நடைபெறுகிறது. 
தற்போது, 3 தொகுப்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆங்கில அகராதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தினமும் முறைப்படி பயன்படுத்தி, மாணவர்கள் அதிகமான ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள ஆசிரியர்கள் உதவவேண்டும் என்றார்.
இப்பயிற்சியில் 413 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் எஸ். மாடசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com