"புயல் பாதிப்பு: ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்தளிக்கும் வசதி'

காரைக்காலில், கஜா புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு

காரைக்காலில், கஜா புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்தளிக்கும் வசதி செய்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற, கஜா புயல் தொடர்பாக முன்னும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கஜா புயல் மற்றும் மழையினால் தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர், கடலோரப் பகுதிகளில் வசிப்போரை கண்டறிந்து அருகில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் தங்கவைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். குடிநீர், உணவு மற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகளை செய்துத்தர அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் வசதி கல்வித்துறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 16 டன் அரிசி, போதுமான காய்கறிகள், 4 டன் மளிகைப் பொருள்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் இருந்து தங்கும் கூடத்தில் உள்ளோருக்கு உணவு கொண்டு செல்லவும் ஊழியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும்.
மின்துறையினர் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது என தெரிவித்த ஆட்சியர், சீரமைப்புப் பணிகளை உயரதிகாரிகள் கண்காணிப்பில் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரிடர் மீட்புக் குழுவில் இடம்பெற்றிக்கும் அரசுத் துறையினர் ஒவ்வொருவரும் தீவிரமான பணிகளில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
புயல் கரையை கடந்துவிட்ட பிறகும் அரசுத் துறைகளின் அதிகாரிகள்  சேவையில் குறைபாடு இருக்கக் கூடாது. பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கும் விவரம் தெரிவிக்கப்படும். இதை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com