ஆக்ரோஷ "கஜா' தரை தட்டியது மணல் தூர்வாரும் கப்பல்

கஜா புயல் காரணமாக, காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மணல் தூர்வாரும் கப்பல்

கஜா புயல் காரணமாக, காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மணல் தூர்வாரும் கப்பல் (டிரெட்ஜர்) புயலால் சுமார் 500 மீட்டர் தள்ளப்பட்டு கரையில் தரைத்தட்டி நின்றது.
காரைக்கால் துறைமுகத்தினுள் கடலில் இருந்து நுழையும் கப்பலுக்கு ஏதுவாக, மணல் தூர்வாரும் பணியில் டிரெட்ஜர் என்கிற தூர்வாரும் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இது துறைமுகத்தின் ஒரு பெர்த்தில் நிறுத்தி பயன்படுத்தப்படுகிறது. 
இந்த கப்பலில் 25 பேர் பணியிலிருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீசிய கடும் சூறைக்காற்றில், இந்த கப்பல் சுமார் 500 மீட்டர் தென்புறமாக தள்ளிக்கொண்டு சென்று, கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவன ஜெட்டி அருகே தரைத்தட்டி நின்றது.
கப்பல் தரைத்தட்டி நிற்பது குறித்து துறைமுகத்துக்கு கப்பல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர், துறைமுகத்திலிருந்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த பகுதிக்குச் சென்றனர். கப்பலில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை துறைமுகம் திரும்பினர். இந்த கப்பலை, துறைமுகத்திலிருந்து இழுவைக் கப்பல் கொண்டு இழுத்துச் செல்லப்படும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பல் தரைத்தட்டியதால் கப்பலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com