கஜா புயல்: காரைக்காலில் துரிதகதியில் மீட்புப் பணிகள்: புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி

காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயல் மீட்புப் பணிகள் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயல் மீட்புப் பணிகள் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்தார். காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், வடக்கு வாஞ்சூர் உள்ளிட்ட மீனவக் கிராமப் பகுதிகளில் புயல் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து மீனவர்களிடமும், பொதுமக்களிடமும் பாதிப்புகள் குறித்துகேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியது :
காரைக்கால் பகுதியில் மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் புயல் காரணமாக அலைகள் உயரமாக எழுந்ததால் கடலோரத்திலிருந்து படகுகள் சுமார் ஒரு கி.மீ. துரம் வரை தள்ளப்பட்டு தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன. சில படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர், தொடர்புடைய அதிகாரிகளைஅனுப்பி கணக்கெடுப்பு செய்து, அதன் பின்னர் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். சில குடிசைவீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மிக துரிதமாக மேற்கொண்டுள்ளது. மின்விநியோகத்தை உடனடியாக கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சேத மதிப்பு குறித்து அதிகாரிகளுடன்ஆலோசித்து உரிய முடிவுஎடுக்கப்படும். கஜா புயலை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக எதிர்கொண்டதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
அப்போது, புதுச்சேரி அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ஷாஜகான், கந்தசாமி, எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com