காரைக்கால்

காரைக்காலில் 2 ஆயிரம் மரங்கள் சாய்ந்து நாசம்

DIN

கஜா புயலுக்கு காரைக்காலில் சுமார் 2 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலோரத்தில் நிறுத்தப்பட்டிந்த 100-க்கும் மேற்பட்ட சிறிய மோட்டார் படகுகளும் சேதடைந்தன.
கடந்த 11 -ஆம் தேதி வங்கக் கடலில் புயலாக உருவெடுத்தது கஜா. நாகை அருகே இப்புயல் வியாழக்கிழமை நள்ளிரவு கரையை கடந்தது. இதனால், காரைக்கால் பகுதியில் அன்றிரவு 11.30 மணியளவில் தொடங்கிய சூறைக்காற்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி வரை நீடித்தது. இடைவிடாது வீசிய கடும் காற்றில், காரைக்கால் பகுதியில் மரங்கள், மின் கம்பங்கள், வணிக நிறுவன விளம்பரப் பலகைகள், கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் என பெரும்பான்மையானவை பாதிக்கப்பட்டன.
மின்சாரம் மாவட்டத்தின் முழுமைக்கும் துண்டிக்கப்பட்டது. காரைக்காலுக்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், பொதுப் பணித் துறையினர் மீட்புப் பணிக்கென நியமிக்கப்பட்டவர்ககள், சாய்ந்த மரங்களை போக்குவரத்துக்கு இடையூறின்றி அப்புறப்படுத்தினர். மின்துறையினர் தீவிரமாக சாய்ந்த கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துகள் வெள்ளிக்கிழமை இயங்கியதால் மக்களுக்கு அவதி குறைந்தது. ஆனால், மின்சாரமின்மை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அதிகாரிகளுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார். சுமார் 2 ஆயிரம் மரங்கள், 200 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. தாழ்வானப் பகுதிகளில் இருந்து மக்கள் சுமார் 4,500 பேர் 40-க்கும் மேற்பட்ட மையங்களில் தங்கவைத்து இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது. கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மைய சமையலகத்திலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT