நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ சிறப்பு ஹோமம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ நிகழ்ச்சி சிறப்பு ஹோமத்துடன் 

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ நிகழ்ச்சி சிறப்பு ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முக்கிய, நிகழ்வாக சுவாமிகளுக்கு பவித்ரம்  சனிக்கிழமை அணிவிக்கப்பட்டது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ நிகழ்ச்சியின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை இரவு புண்யாஹவாசனம், வாஸ்து ஹோமம் நடைபெற்றன. 2-ஆம் நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின.  உத்ஸவரான ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னிதிக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார். பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தினர்.  மூலவர் ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ரங்கநாயகி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னிதிகளின் விக்ரஹங்களுக்கு  பட்டுநூல் மாலை (பவித்ரம்) அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 18) வரை தினமும் காலை, மாலை வேளையில் யாகசாலை பூஜையுடன் நடைபெறுகிறது. இரவு மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டு, உத்ஸவ பெருமாள் வீதியுலா நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுவது :  திருப்பவித்ரோத்ஸவம் என்பது ஆண்டில் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இதுவொரு குடமுழுக்கு விழாவுக்கு நிகரானது. 3 நாள்களும் புனிதநீர் யாகசாலையில் வைத்து, நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, கடம் புறப்பட்டு சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது பக்தர்களுக்கு கூடுதல் பயனைத் தரும் என்றனர். பவித்ரோத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவல் குழுவினர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com