மின் இணைப்பை சீரமைக்காததை கண்டித்து சாலை மறியல்

மின் இணைப்பை சீரமைக்காததைக் கண்டித்து, காரைக்கால் நகர மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் இணைப்பை சீரமைக்காததைக் கண்டித்து, காரைக்கால் நகர மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் துண்டிக்கப்பட்ட மின்சாரம், காரைக்கால் நகரப் பகுதியில் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. எனினும், பல பகுதிகளில் சனிக்கிழமை இரவு வரை மின்சார பிரச்னை முழுமையாக தீர்வுக்கு வரவில்லை.
காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட சின்னக்கண்ணு செட்டித் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள், கடந்த வியாழக்கிழமை இரவு முதல் இதுவரை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தாங்கள் இருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி சீரமைப்புப் பணியை செய்ய முன்வரவில்லை என கண்டித்து, பாரதியார் சாலையில் பழைய ரயிலடி அருகே சனிக்கிழமை இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் சூறைக் காற்றில் விழுந்த மரக் கிளைகளை போட்டு, பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகமான போக்குவரத்துள்ள இச்சாலையில் முடக்கம் ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றன.
காரைக்கால் நகர காவல்நிலைய போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பகுதியில் உள்ள குறைபாட்டைக் களைந்து விரைவாக மின்சாரம் கிடைக்கச் செய்ய, மின்துறையினரிடம் பேசுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதை ஏற்று அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் 30 நிமிடத்துக்கும் மேலாக நடைபெற்றதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com