மது வாங்கி வந்தவரை கத்தியால் குத்தி பணம் பறித்த மூவர் கைது

மதுக்கடையிலிருந்து மது வாங்கிக்கொண்டு வெளியே வந்தவரை கத்தியால் குத்தி, பணம், செல்லிடப்பேசியை பறித்துச்

மதுக்கடையிலிருந்து மது வாங்கிக்கொண்டு வெளியே வந்தவரை கத்தியால் குத்தி, பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மூவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி மேலவாஞ்சூரில் உள்ள ஒரு மதுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகூரைச் சேர்ந்த முஜ்புர் ரஹ்மான் என்கிற ஆசைத்தம்பி (31) என்பவர் மது புட்டிகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். இருள்சூழ்ந்த இடத்தில் நின்ற மூவர், அவரை கத்தியால் குத்தினர். நிலை குலைந்து கீழே விழுந்த அவரிடமிருந்து ரூ.200 ரொக்கம், செல்லிடப்பேசி, மது புட்டிகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.
அந்த பகுதியினர் முஜ்புர் ரஹ்மானை காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் திருப்பட்டினம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர் மரி கிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளர் செ.பெருமாள் ஆகியோர் குற்றச் செயலில் ஈடுபட்ட நாகப்பட்டினம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கிருஷ்ணாகரன் (18), நாகப்பட்டினம், மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த சிராஜூதீன் (20), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (15) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்த தகவலை  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், குற்றச் செயல் புரிந்தவர்களை, 8 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாரின் செயலைப் பாராட்டினார். கைது செய்யப்பட்டவர்களை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விக்னேஸ்வரனுக்கு 15 வயதாவதால் அவரை புதுச்சேரி சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்குமாறும், மற்ற இருவரையும் 15 நாள் சிறையிலடைக்க நீதிபதி பிரபு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com