புயலால் வீடிழந்தவர்களுக்கு அரசே வீடு கட்டித் தர வலியுறுத்தல்

காரைக்காலில் கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு புதுச்சேரிஅரசே வீடுகள் கட்டித் தர முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு புதுச்சேரிஅரசே வீடுகள் கட்டித் தர முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டம் காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை  நடைபெற்றது. தேசிய செயலாளர் ஏ. ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநில தலைவர் பாலகிருஷ்ணன், அமைப்பாளர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் பி. மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேரவையின் மாவட்டத் தலைவராக எம். செல்வராஜ், செயலாளராக ஜி.கே. குமார், துணைத் தலைவராக டி. சங்கர், துணைச் செயலாளராக ஜி. லட்சுமி, பொருளாளராக கே. அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்தோருக்கு புதுச்சேரி அரசே புதிய வீடுகளைக் கட்டித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ. 10 ஆயிரம், உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம், கோழி ஒன்றுக்கு ரூ. 300, மரம் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்களை கணகெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாள்களை 200 - ஆக உயர்த்தி ரூ. 500 கூலி வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com