காரைக்கால்

மிலாது நபி விடுமுறை நாளில் மது விற்பனை செய்த 6 பேர் கைது

DIN

மிலாது நபி திருநாளையொட்டி, புதன்கிழமை மது கடைகளை மூட  கலால்துறை துணை ஆணையர் உத்தரவிட்டவிட்ட நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி அரசின் கலால்துறை, மிலாது நபி நாளையொட்டி புதன்கிழமை கள், சாராயக்கடை, பார் வசதியுடன் கூடிய மது கடைகள், ஹோட்டல்களில் உள்ள மது விற்பனையகம் ஆகியவற்றை மூடுமாறு உத்தரவிட்டது.
காரைக்கால் கலால்துறை துணை ஆணையர் ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவின்பேரில், மாவட்ட கலால்துறை அதிகாரி பொய்யாதமூர்த்தி தலைமையில் கலால்துறையினர், மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லையோரப் பகுதியான வாஞ்சூர், நண்டலாறு, விழுதியூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எல்லைப் புறத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தபோதிலும், அதன் மறைவிடப் பகுதியிலும், பெட்டிக் கடையிலும் சிலர் மது புட்டிகளை வைத்து விற்பனை செய்து வந்தது சோதனைப் பணியில் ஈடுபட்டோருக்கு தெரியவந்தது.
இந்த இடத்துக்குச் சென்ற பொய்யாதமூர்த்தி தலைமையிலான குழுவினர், காரைக்காலைச் சேர்ந்த காளிமுத்து, முத்துவேல், ராஜ், நாகை மாவட்டம், பெருங்கடம்பனூரைச் சேர்ந்த குமார், திருப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ்சுந்தரம், கோயில்பத்து பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்கள் வசமிருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மது புட்டிகளை பறிமுதல் செய்து காரைக்கால் கலால் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
கலால் அதிகாரி பொய்யாதமூர்த்தி இதுகுறித்து கூறும்போது, புதுச்சேரி அரசின் கலால்துறை  சட்டத்தின்படி, எந்தவித உரிமமுமின்றி கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 6 பேரை புதன்கிழமை கைது செய்துள்ளோம். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT