18 நவம்பர் 2018

கல்லூரி விரிவுரையாளர் மர்மச் சாவு

DIN | Published: 12th September 2018 06:44 AM

காரைக்காலில் கல்லூரி விரிவுரையாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்கால் பகுதி கருக்களாச்சேரியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (39). இவர், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.  இவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரதீப்குமார், காரைக்கால் அம்பேத்கர் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். இவர் மேல் மாடியிலும், கீழ்தளத்தில் இவரது தாயாரும் வசிந்து வந்தனர். 
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரதீப்குமாரை காணவில்லை. திங்கள்கிழமை இரவு வீட்டு உரிமையாளர் அவரது தாயாரிடம் சென்று மகன் வாடகை தராமல் உள்ளது குறித்து தெரிவித்ததையடுத்து, 3 நாள்களாக வீட்டுக்கு வரவில்லையென அவர் கூறியுள்ளார். பிறகு, வீட்டு உரிமையாளர் மேல் தளத்துக்கு சென்று பார்த்தபோது, அப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை உணர்ந்து, காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 
தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் அங்கு சென்று வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலில் உயிரிழந்த நிலையில் பிரதீப்குமார் கிடந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, போலீஸார் பிரதீப்குமாரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டபோது,  உயிரிழந்த பிரதீப்குமாருக்கு இதயநோய் இருந்துவந்தது தெரியவந்துள்ளது. பிரதீப்குமார் இதய நோயால் பாதித்து உயிரிழந்தாரா அல்லது குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டாரா என போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More from the section

ராஜசோளீசுவரர் கோயிலில் திருக்கல்யாணம்
காரைக்காலில் மின்சாரம்,  மரங்கள்  சீரமைப்புப் பணிகள் தீவிரம்
நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ சிறப்பு ஹோமம்
மத்திய நிதி மூலம் சாலைகள், மின்சார கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்


கடற்கரையோர மக்களின் கவனத்துக்கு...