டெங்கு கொசுவை அழிக்கும் பணியில் நலவழித்துறையினர் தீவிரம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வாக, ஏடிஸ் கொசு உற்பத்தியாகுமிடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணிகளில் நலவழித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வாக, ஏடிஸ் கொசு உற்பத்தியாகுமிடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணிகளில் நலவழித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் (பொ) மோகன்ராஜ் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களையும், அதன் புழுக்களையும் கண்டறிந்து அழித்தல் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் அத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர். நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், யானைக்கால் நோய் தடுப்பு ஆய்வாளர்கள், களப்பணியாளர்களைக் கொண்ட குழுவினர், மாவட்டத்தில் கொசு உற்பத்தியாகுமிடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொசு உற்பத்தியாகுமிடங்களில் அதன் புழுக்களை அழிக்கும் பணியையும் செய்துவருகின்றனர்.
இதுகுறித்து கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளரான சேகர் புதன்கிழமை கூறும்போது, வரக்கூடிய மழைக்காலத்தில் நீர் தேங்கும் வகையில் தேவையற்ற பொருள்களைக் குடியிருப்புப் பகுதியில் வைத்திருக்காமல், அப்புறப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், வீடு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
மாவட்டத்தில் ஒவ்வொரு கொம்யூனாக, இந்த களப்பணி நடக்கும் வகையில் திட்டம் வகுத்து செயல்படுகிறோம். தற்போது நகர பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான பகுதிகளில் மாலை நேரத்தில் கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com