ரூ.7 லட்சத்தில் காந்தி பூங்காவை மேம்படுத்துவதற்கான பூமி பூஜை

திருப்பட்டினத்தில் உள்ள காந்தி பூங்காவை ரூ.7 லட்சம் செலவில் பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான

திருப்பட்டினத்தில் உள்ள காந்தி பூங்காவை ரூ.7 லட்சம் செலவில் பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
நிரவி -திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தைச் சேர்ந்த காந்தி பூங்கா, தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ளது. திருப்பட்டினம் பகுதியில் சிறுவர்கள், முதியோர்களுக்கு பொழுதுபோக்குக்கான இடமாகவும், இளைஞர்கள் உடற்பயிற்சிக்காகவும் பூங்காவை பயன்படுத்தவேண்டும். அதற்கேற்ப மேம்படுத்தவேண்டும் என திருப்பட்டினம் வணிகர் சங்கத்தினரும், பொதுமக்கள் தரப்பிலும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கு வலியுறுத்தப்பட்டுவந்தது. சட்டப்பேரவை உறுப்பினரும்,  புதுச்சேரி மின்திறல் குழுமத் தலைவருமான  கீதாஆனந்தன், மின் திறல் குழும நிதி  ரூ. 4.44 லட்சத்தில்  பூங்காவை மேம்படுத்தவும்,  ரூ.2.38 லட்சம்  செலவில் பூங்காவில் மின் வசதி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்கான பணிகளை திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்று, திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை பூங்காவில் நடைபெற்றது. பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ், உதவிப் பொறியாளர் எம்.லோகநாதன், இளநிலைப் பொறியாளர் பி.மெய்யழகன் மற்றும் திருமலை வணிகர் சங்க நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.  6 மாத காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவேற்றி பொதுமக்கள் பூங்காவை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். அதற்கேற்ப பூங்காவில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com