புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தொடர் நடவடிக்கை: போராட்டக் குழு வலியுறுத்தல்

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு அரசியல் கட்சிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு அரசியல் கட்சிகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் போராட்டக்குழு பொதுக்குழு கூட்டம் மூத்த உயர்நிலைக் குழு உறுப்பினர் டி. ராமலிங்க ரெட்டியார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. உயர்நிலைக் குழு உறுப்பினர் வி. மனோகரன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்தும் போராட்டக்குழு நிறுவனரும், அமைப்பாளருமான எஸ்.பி. செல்வசண்முகம் பேசினார்.
தீர்மானங்கள்: புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில், அரசியல் கட்சியினர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை அரசியல் கட்சிகள் போட்டியிட வேண்டும். காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் பயிலும் 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறு சம்பந்தமாக பயிற்றுவிக்க போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஜிப்மர் மேம்படாமல் உள்ளது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
காரைக்கால் ஆட்சியரகப் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை துணைநிலை ஆளுநர் நீக்க வேண்டும். ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் வரை போராட்டக்குழு பல்வேறு கட்ட பிரசாரங்களை மேற்கொள்ளும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. உயர்நிலைக்குழு உறுப்பினர் பொன். பன்னீர்செல்வம் வரவேற்றார். உயர்நிலைக் குழு உறுப்பினர் நிரவி எம். மாறன் நன்றி கூறினார். பல்வேறு நிலை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com