காரைக்கால்

ஜடாயுபுரீசுவரர் கோயில்  மாசி மக தேரோட்டம்

DIN

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயிலில் தேர் திருவிழா திங்கள்கிழமை  நடைபெற்றது. 
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத 
ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவ நிகழ்ச்சி கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பிரமோத்ஸவத்தின் 2-ஆம் நாள் இரவு சூரிய பிரபையில் சுவாமி வீதியுலாவும், 3-ஆம் நாள்  இரவு சந்திர பிரபையிலும், 4-ஆம் நாள் இரவு பூத வாகனத்திலும், 5-ஆம் நாள் ஸ்ரீ தியாகராஜராட்டமும், 6-ஆம் நாள் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 7-ஆம் நாள் ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மின்சார சப்பரப் படலில் வீதியுலாவும் நடைபெற்றது. 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேர்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ பார்வதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை மற்றும் சோடச உபசாரங்கள் நடத்தப்பட்டு, தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
தேரினுள் வீற்றிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். நான்கு மாட வீதிகளில் வழியே தேர் இழுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 2 மணியளவில் தேர்நிலையை வந்தடைந்தது. தேர் செல்லும் வீதிகளில், ஒவ்வொரு வீட்டின் முன்னும் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு மக்கள் வழிபட்டனர்.
திருப்பட்டினம் பகுதி முக்கிய பிரமுகர்களும், திரளான பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (பிப்.19) காலை ஸ்ரீ நடராஜர் தீர்த்தவாரி நடத்தப்பட்டு, பகல் 12 மணியளவில் கொடியிறக்கம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஏ.வீரசெல்வம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT