பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கக் கோரி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கத்தினர்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கக் கோரி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கத்தினர் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை (பிப்.18) தொடங்கினர்.
கடந்த 1.1.2017 முதல் 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியப் பங்களிப்பைப்  பெறவேண்டும். 2-ஆவது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும்.
பி.எஸ்.என்.எல். நிறுவன நில மேலாண்மை கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் தரவேண்டும். பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிக்க தனியாரை ஈடுபடுத்தும் முடிவை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.18 முதல் 20-ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஏற்கெனவே ஊழியர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தின் பிரதான வாயில் கதவை மூடி, ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்வீனர் சிவராஜ் தலைமை வகித்தார். என்.எ"ஃ"ப்.டி.இ. சங்கத்தைச் சேர்ந்த இருதய சவுரிராஜ் முன்னிலை வகித்தார்.  இப்போராட்டத்தால் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com