புதுச்சேரி அரசைக் கண்டித்து காரைக்கால் போராட்டக் குழுவினர் 26-இல் போராட்டம்

காரைக்காலில் ஜிப்மர் கிளை விவகாரம், மருத்துவமனை சீர்கேடு உள்ளிட்டவற்றில் புதுச்சேரி அரசின் அலட்சியத்தைக் கண்டித்து போ


காரைக்காலில் ஜிப்மர் கிளை விவகாரம், மருத்துவமனை சீர்கேடு உள்ளிட்டவற்றில் புதுச்சேரி அரசின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டக் குழு சார்பில் பிப். 26-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
காரைக்கால் போராட்டக்குழுவின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 26 -ஆம் தேதி ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.பி. செல்வசண்முகம் சனிக்கிழமை கூறும்போது,   காரைக்கால் தனி யூனியன் பிரதேசம் ஏன் வேண்டும் என்பதை விளக்கும் வகையில் காரைக்காலில் இந்த போராட்டம் அமைகிறது. காரைக்காலுக்கென அனுமதிக்கப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை இன்னும் நிரந்தர நிலையில் அமையவில்லை. இதை புதுச்சேரியின் மற்றொரு பிராந்தியமான ஏனாமுக்கு கொண்டு செல்லும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 
அரசு பொது மருத்துவமனை என்பது எந்தவொரு மேம்பாடுமின்றி உள்ளது.  
காரைக்காலில் மருத்துவ வசதியை மேம்படுத்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதே கிடையாது. 
விளை நிலத்தில் விமான தளத்தை காரைக்காலில் தனியார் நிறுவனம் அமைக்கவுள்ளது. இதையும் எதிர்க்க அரசுக்கு துணிவில்லை. இதுபோன்ற பல விவகாரங்களில் காரைக்கால் மக்களை புதுச்சேரி ஆட்சியாளர்கள் துச்சமாக நினைப்பதால், காரைக்கால் தனி யூனியன் பிரதேசத்தை வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com