காலிமனையில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு

சீர்காழி தென்பாதி பாப்பையா நகரில், காலிமனைகள் மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், மழைநீர்

சீர்காழி தென்பாதி பாப்பையா நகரில், காலிமனைகள் மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில், மழைநீர் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  
சீர்காழி நகராட்சியின் 21-ஆவது வார்டுக்குள்பட்ட பாப்பையா நகர், என்.ஜி.ஓ. நகர் பகுதிகளில், 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள காலிமனைகளில் தேங்கிநிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால், குடியிருப்புவாசிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள உணவுகளைத் தேடி பன்றிகள் வருவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. ஆகையால், நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com