சீர்காழியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா

சீர்காழியில் புதிதாக நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சீர்காழியில் புதிதாக நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ஈசானியத் தெருவில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை சேதமடைந்திருந்தது. இதைத்தொடர்ந்து, சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, தனது சொந்த செலவில், அதே இடத்தில் புதிய சிலை அமைக்க முடிவுசெய்தார். அதன்படி, ரூ. 22 லட்சம் செலவில், 11 அடி உயரம் கொண்ட எம்.ஜி.ஆர். முழுஉருவ வெண்கல சிலை (750 கிலோ எடை) மார்பிள்ஸ் பதிக்கப்பட்ட மண்டபத்துடன் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட பொருளாளர் வா. செல்லையன், நகர செயலாளர் அ. பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், கே.எம். நற்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் ராமலிங்கம், சிலையைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ம. சக்தி, பேரூர் கழக செயலாளர் போகர். ரவி, ஜெ. பேரவை செயலாளர் ஏ.வி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com