நாகை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி மற்றும் இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும், அனைத்து பட்டா மாறுதல்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரைகளைக் கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக நீடித்தது. நாகை மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில்... நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் இரா. செல்வம் முன்னிலை வகித்தார். இதில், 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூரில்... கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் செல்வேந்திரன் தலைமை வகித்தார். இதில், 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
திருக்குவளையில்... திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 20-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில்... மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் டி.திருமலைச்சங்கு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் என். குமரவேலு முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
தரங்கம்பாடியில்... தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பத்திரிகை செயலாளர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழியில்... சீர்காழி வட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டக் கிளைத் தலைவர் பி. பவளசந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நவநீதன், மாவட்டத் துணைத் தலைவர் ஜாஹீர் உசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது தவிர, வேதாரண்யம், குத்தாலம், ஆகிய நகரங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com