ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் மனிதநேய அணுகுமுறை தேவை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குத் தொடர்புடைய 7 பேரின் விடுதலையில் மத்திய அரசு மனிதநேயத்துடன் செயல்படவேண்டும் என்றார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குத் தொடர்புடைய 7 பேரின் விடுதலையில் மத்திய அரசு மனிதநேயத்துடன் செயல்படவேண்டும் என்றார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த இடர்பாடுகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் அண்மைக் காலமாக தொடரும் அரசியல் சூழல்களுக்கிடையே நிகழும் ஆட்சி மாற்றங்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது. ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பான 7 பேரின் விடுதலையில் மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பான 7 பேரையும் விடுதலை செய்தால் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களையும் விடுதலை செய்ய வேண்டி வரும் என்ற தயக்கம் இருக்கிறது. 20 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மதரீதியான பாகுபாடுகளைக் காட்டாமல் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com