6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

சீர்காழி பகுதியில் 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீர்காழி பகுதியில் 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு, சீர்காழியிலிருந்து புளிச்சக்காடு, ஆர்ப்பாக்கம், பச்சாபெருமா நல்லூர், ஓதவந்தான்குடி, கொப்பியம், மாதானம், பழையபாளையம், தாண்டவன்குளம், புதுப்பட்டினம் ஆகிய கிராமங்கள் வழியே அரசு நகரப் பேருந்து நாள்தோறும் 4 முறை இயக்கப்பட்டு 
வந்தது. 
காலை, மாலை இருவேளைகளிலும் எளிதில் சென்று வரும் வகையிலும் பேருந்து இலவச பயண அட்டை வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தது. தவிர, பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று வரும் தொழிலாளர்களுக்கும் இந்த நகரப் பேருந்து பயனுள்ளதாக இருந்து வந்தது. 
இந்நிலையில், தொடர்ந்து வந்து கொண்டிருந்த இப்பேருந்து கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இது குறித்து பலமுறை அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலர்களிடத்திலும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.
இதுகுறித்து, ஆர்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தராமன் கூறியது: சீர்காழியிலிருந்து பழையாறு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து கடந்த 6 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சேர முடியவில்லை. எனவே, 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட இந்த அரசு நகரப் பேருந்தை உடனடியாக மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com