வாழும் கலை தியான பயிற்சி மையம்  திறப்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வாழும் கலை அமைப்பு சார்பில் தியான பயிற்சி மைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வாழும் கலை அமைப்பு சார்பில் தியான பயிற்சி மைய திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழும் கலை அமைப்பின் மூலம், உலகம் முழுவதும் எளிய யோகாசனம், பிராணாயாமம், தியானம் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்த அமைப்பின் சார்பில் தியான பயிற்சி மையம் மயிலாடுதுறை அருகேயுள்ள திருவிழந்தூரில் திறக்கப்பட்டது. 
பயிற்சி ஆசிரியர் சுமதிரமேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், பெங்களூரு ரவிசங்கர்ஜியின் சீடர் தாமோதாரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தியான மையத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு ஹோமங்கள், கணபதி, ருத்ர பூஜைகளும், தியான வகுப்புகளும் நடைபெற்றன.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், மருத்துவர் ராஜசிம்மன், வாழும் கலை அமைப்பின் மூத்த ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், வாழும் கலை அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், பிரதீப், மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஏ. அப்பர்சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com