அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் சகாயமேரி ரீட்டா


மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் சகாயமேரி ரீட்டா திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு நோய்த் தடுப்புக்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் சகாயமேரி ரீட்டா திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அவர், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
கலந்தாய்வுக் கூட்டம்: தொடர்ந்து, மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சி.சி.சி. சமுதாயக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, நோய்த் தடுப்புக்காக களப்பணியாற்றவுள்ள சமுதாயக் கல்லூரி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் நாகை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன், நோய்த் தடுப்பு மற்றும் மருந்துத் துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம், மயிலாடுதுறை அரசுப் பெரியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர், மாவட்ட பூச்சியியல் அலுவலர் சுப்பிரமணியன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
துலாக்கட்ட காவிரியில் ஆய்வு: இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநர் சகாய மேரி ரீட்டா, துலாக்கட்ட காவிரி பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்தினரை அறிவுறுத்தினர்.
பின்னர் டெங்கு, பன்றிக்காய்ச்சால் தடுப்புக்கான களப் பணியில் ஈடுபடவுள்ள சமுதாயக் கல்லூரி மாணவியருக்கு கை கழுவும் முறைகள் குறித்துப் பயிற்சியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com