நாகப்பட்டினம்

நாகையில் மறியல்: மின்வாரிய  ஒப்பந்தத் தொழிலாளர்கள் 145 பேர் கைது

DIN

நாகையில், மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 145 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒப்பந்த அடிப்படையில் ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கருணைத் தொகை ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிபிஐஎம் சார்பு) நாகை திட்டத் தலைவர் எஸ். சிவராஜன் தலைமையில், நாகையில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளர் சீனி. மணி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, திட்டச் செயலாளர் எம். கலைச்செல்வன், திட்டப் பொருளாளர் ஆர். செந்தில்குமார், கோட்டச் செயலாளர் வி. செபஸ்டியான் ஆகியோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர், மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட  ஒப்பந்தத் தொழிலாளர்கள் 145 பேரை கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர். மாலை 6.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  இந்த மறியல் போராட்டத்தில் நாகை மட்டுமன்றி மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய கோட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT