நாகை மாவட்டத்தில் 102 பாதுகாப்பு மையங்களில் 44,087  பேர் தங்க வைப்பு

கஜா புயல் சீற்றம் மற்றும் கனமழையில் அதிகம் பாதிக்கப்படும் எனக் கருதப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 44,087 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கஜா புயல் சீற்றம் மற்றும் கனமழையில் அதிகம் பாதிக்கப்படும் எனக் கருதப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 44,087 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
கஜா புயல் எச்சரிக்கையொட்டி, நாகை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக 627 பொதுக் கட்டடங்களும், கால்நடைகளை பாதுகாக்க 212 பாதுகாப்பு இடங்களும் கண்டறியப்பட்டன. 
வியாழக்கிழமை இரவு நாகை அருகே கஜா புயல் கரையைக் கடக்கும் எனக் குறிப்பிடப்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகை மாவட்டத்தில் 137 பாதுகாப்பு மையங்களில் மக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்ட தயார்ப்படுத்தப்பட்டன. 
வட்டம் வாரியாக தயார் நிலையில் வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களின் எண்ணிக்கை :  
நாகை- 26, கீழ்வேளூர்- 8, திருக்குவளை- 3, வேதாரண்யம்- 61, மயிலாடுதுறை- 12, தரங்கம்பாடி- 13, சீர்காழி- 14. இதில்,  நாகை வட்டத்தில் 8 பாதுகாப்பு மையங்களும், கீழ்வேளூர் வட்டத்தில் 8 பாதுகாப்பு மையங்களும், திருக்குவளை வட்டத்தில் 3 பாதுகாப்பு மையங்களும், வேதாரண்யம் வட்டத்தில் 61 பாதுகாப்பு மையமும், தரங்கம்பாடி வட்டத்தில் 8 பாதுகாப்பு மையங்களும், சீர்காழி வட்டத்தில் 14 பாதுகாப்பு மையங்களும்  வியாழக்கிழமை பிற்பகலுக்குப் பின்னர் திறக்கப்பட்டு, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் 44,087 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
வட்டம் வாரியாக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை : நாகை - 1,054, கீழ்வேளூர் - 5,209, திருக்குவளை - 342, வேதாரண்யம் -  26,965,  தரங்கம்பாடி- 1,158, சீர்காழி-  9,368.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com