புயல் பாதித்தப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிப்பட்டு


கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கஜா புயலின் கோரதாண்டவத்தால், நாகை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கடந்த 4 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிச்சி, ஆழியூர், பாலக்குறிச்சி மற்றும் அகலங்கண் கிராமங்களில் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு நிர்வாகத்தினர் குடிநீருக்காக செய்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து நாகை மாவட்டம், அகலங்கண் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கூறியது:
கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், போதுமானதாக இல்லை. பாதிப்புக்குள்ளாகியுள்ள மின் கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, மின் விநியோகம் செய்யப்பட்டால்தான் குடிநீர் பற்றாக்குறை நீங்கும். அதுவரை, கிராமங்களில் கூடுதல் ஜெனரேட்டர் வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com