புயல் பாதிப்பு பகுதிகளில் போர்க்கால நிவாரணப் பணிகள்: கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டி:
தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால், இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கி 3 நாள் ஆகியும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய அடிப்படைத் தேவைகள் செய்து கொடுக்கப்படவில்லை.
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குக்கிராமங்களின் நிலை குறித்து வெளி உலகுக்கு சரிவர தெரியவில்லை. மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியவில்லை. விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தக் கணக்கெடுப்பும் நடத்தாமல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிறப்பாக செய்துள்ளதாக தெரிவிக்கும் அரசு, மீட்புப் பணிகளையும், நிவாரண உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.
பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஏ.வி. முருகையன், நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி, விவசாய சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிமணியன், நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com