குத்தாலம் பகுதியில் மீலாதுநபி விழா

குத்தாலம் பகுதியில் மீலாதுநபி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

குத்தாலம் பகுதியில் மீலாதுநபி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
ரபீயுல் அவ்வல் என்ற அரபி சொல்லுக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரி ஆண்டில் ரபியுல் அவ்வல் மாதம் 12-ஆம் நாள் மீலாதுநபி எனப்படும் முஹம்மது நபியின் பிறந்த நாளாகும். இதையொட்டி, மீலாதுநபி தினமான புதன்கிழமை குத்தாலம் பகுதியில் உள்ள குத்தாலம், தேரழந்தூர், கிளியனூர், எலந்தங்குடி, நக்கம்பாடி, வானாதிராஜபுரம், திருவாலங்காடு, திருவாவடுதுறை, தி.பண்டாரவாடை, மங்கநல்லூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் விமரிசையாக மீலாதுநபி விழா கொண்டாடப்பட்டது. கடந்த நவ.10-ஆம் தேதி முதல் 12 நாள்கள் அனைத்து பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, மாண்பு, பண்பு நலன்கள் கூறும் அரபு மொழிப்பாக்களின் தொகுப்பான சுபுஹான மவ்லிது என்றழைக்கப்படும் புகழ் மாலைகளை பேஷ்இமாம், முஅத்தீன் ஆகியோரால் ஓதப்பட்டது. பின்னர், அந்தந்த ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினருக்கு சீரணி மற்றும் நெய் சோறுகளை முத்தவல்லி, நாட்டாண்மை மற்றும் ஜமாத் தலைவர்கள் வழங்கினர். மீலாதுநபி தினத்தில் ஜமாத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்பட்டு இரட்டிப்பாக நெய் சோறு வழங்கப்பட்டன. பெரும்பாலான  பள்ளிவாசல்களில்  தால்சா எனப்படும் இறைச்சியுடன் கூடிய பருப்புக் குழம்பு மற்றும் கறி குழம்பும் சேர்த்து வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com