மரங்களை இழந்த பசுமைப் பள்ளிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இயற்கை வளத்தை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இயற்கை வளத்தை மேம்படுத்த வளர்க்கப்பட்டு வந்த மரங்கள் கஜா புயலில் சேதமடைந்ததால் பள்ளியின் கம்பீர தோற்றம் 
களையிழந்துள்ளது. 
வேதாரண்யம் பகுதியில் உள்ள பள்ளிகளில் மரங்கள் வளர்ப்பதில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் புங்கை , வேம்பு மற்றும் பயன்தரும் பழ மரங்களை நட்டு வைத்து பராமரிக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக ஆயக்காரன்புலம், தகட்டூர், தாணிக்கோட்டகம், வேதாரண்யம், மணக்குடி என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருவரை யொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு மரங்களை வளர்த்துள்ளனர். தகட்டூர் அரசுப் பள்ளியில் இருந்த அடர்ந்த மரங்களை பார்த்து ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டினர். இந்நிலையில், கஜா புயலில் சிக்கிய மரங்கள் சேதமடைந்து இயற்கை வளத்தோடு கம்பீரமாக காணப்பட்ட பள்ளி வளாகம் அதன் அழகு தோற்றத்தை இழந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com