புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

காங்கிரஸ், திமுக ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 08:21 AM

முழு அடைப்புப் போராட்ட கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், எரிபொருள்கள் விலை உயர்வை உடனடியாகக் குறைக்கக் கோரியும் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்புப் போராட்டக் கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ், திமுக மாவட்டப் பொறுப்பாளர் என். கெளதமன் ஆகியோர் தலைமை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜபருல்லா மற்றும் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

More from the section

சாகுபடிக்குத் தண்ணீர் கோரி வீடுகளில் கருப்புக் கொடி 
அரசுப் பேருந்தை சேதப்படுத்த முயன்றவர் கைது
மக்கள் குறைதீர் கூட்டம்: 16 பயனாளிகளுக்கு ரூ. 1.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
திருமருகலில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்
தூய்மைப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்